சத்தியமங்கலம் அருகே சாதி மாறி காதல் திருமணம் செய்துகொண்ட மகளின் கணவனை கொல்ல முயன்றபோது கணவரின் தங்கை பரிதபாமாக (Sathyamangalam) உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுபாஷ் (24) மற்றும் மஞ்சு (21) . இந்த இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் .
ஒரு கட்டத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பு அதிகமாக இருவரும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த மஞ்சுவின் அப்பா சுபாஷை தீர்த்துக்கட்ட சதி திடம் தீட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சுபாஷ் பைக்கில் செல்லும் போது மஞ்சுவின் தந்தை கொலை செய்யும் நோக்கில் பிக்அப் வேனில் அதிவேகமாக பின்னால் வந்து, மோதியுள்ளார்.
Also Read : https://itamiltv.com/aiadmk-will-conduct-interviews-election-2024/
இதில் சுபாஷ் படுகாயம் அடைந்ததுடன் பைக்கில் உடன் இருந்த அவரின் தங்கை ஹாசினி (16) பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார் .
இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுபாஷ் தனது தங்கையை கொண்ட மஞ்சுவின் தந்தை மற்றும் தாய் சித்ரா மீது புகார் கொடுத்துள்ளார்.
சுபாஷ் கொடுத்த புகாரின்பேரில் மஞ்சுவின் தந்தை சந்திரன் (Sathyamangalam) மற்றும் தாய் சித்ரா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.