சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும் என சட்டப்பேரவையில் (TNCM Announcement) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது ,
நேற்று முன் தினம் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ளது.
வழக்கம் போல் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான சர்ச்சைகள் வந்த நிலையில் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கான பட்ஜெட் சிறப்பான முறையில் இருப்பதாக பலர் ஆதரவு தெரிவித்தும்.
மக்களின் அடிப்படை தேவைகள் கூட இந்த பட்ஜெட்டில் பூர்த்தி செய்ய முடியாது என சிலரும் அவரவர் வாய்க்கு வந்தபடி கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும் என அனைவர் முன்னிலையிலும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும் நிலையில் திறப்பு விழாவிற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி
கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/tn-budget-session-ends-today/
இந்நிகழ்வை விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றும் .அதனால் கலைஞர் நினைவிடம்,
புதுப்பிக்கப்பட்ட (TNCM Announcement) பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கும் செய்தியினை சட்டப்பேரவையில் அறிவிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்