வங்கி கடன் வாங்கி சொத்துக்கள் வாங்க போகிறீர்களா? அப்படி என்றால் அதற்கு முன்பாக சில விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம் (financial tips).
வங்கியில் லோன் வாங்கி ஒரு சொத்து வாங்கும்போது அது வளரும் சொத்தா? இல்லை தேய்மானம் ஆகக் கூடிய சொத்தா? என்று முதலில் கவனிக்க வேண்டும்.
நம்மில் பலரும் நமது தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே கடன் வாங்குகின்ற சூழலுக்கு தள்ளப்படுகிறோம். அப்படி இருக்கையில், கடன் வாங்கி ஒரு சொத்து வாங்கும் பொழுது அது வளரும் சொத்தா இல்லை தேய்மானம் ஆகும் சொத்தா என்பதை கவனிக்க வேண்டும்.
பொதுவாக, சாமானிய மக்களை பொருத்தவரையில் தேய்மானம் ஆகின்ற பொருளை சொத்தாக கருத முடியாது. எனவே, தேய்மானம் ஆகக்கூடிய ஒரு பொருளை சொத்தாக வாங்குவதற்கு கடன் வாங்கக் கூடாது.
உதாரணத்திற்கு, இப்பொழுது பத்து லட்சம் கொடுத்து ஒரு கார் வாங்குகிறோம் என்றால், அதனை 6 மாதத்திற்கு பின்னர் விலைக்கு விற்கும் பொழுது 7 லட்சத்திற்கு கூட விலை போகாது. கார் என்பது தேய்மானம் ஆகின்ற ஒரு சொத்து. அதனை கடனில் வாங்குவது என்பது தவறான முடிவு.
இது மாதிரியான செலவுகளுக்கு உங்களுடைய சம்பளத்தில் ஒரு தொகையை சேர்த்து வைத்து அதன் மூலமாக வாங்குவது தான் சிறந்தது.
இதுவே, ஒரு வீடு வாங்கும் பொழுது அது பொருளாதார சுழற்சிக்கு ஏற்றவாறு அதனுடைய மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். இந்த மாதிரியாக வீடு நிலம் போன்ற சொத்துக்களை வளரும் சொத்து என்ற அடிப்படையில் கடன் வாங்கி வாங்கலாம்.
எனவே, ஒரு சொத்துக்காக கடன் வாங்குவதற்கு முன்பாக இந்த அடிப்படை வேறுபாடுகளை (financial tips) புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.