ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்போர் மீது FIR பதிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய 2கே காலகட்டத்தில் ஒரு பக்கம் டெக்னாலஜி நம்மை அசுர வேகத்தில் வளர்த்து வந்தாலும் அதே டெக்னாலஜி நம்மை அடிமை படுத்தி சீரழியவும் வைக்கிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வெறும் லைக்குகள் மற்றும் விஸ்களுக்குகாக இன்றைய இளசுகள் ஆபத்து என்றும் அறியாமல் பல ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்தும் , ஓடும் பேருந்தில் தொங்கியும் ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து அதனை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read : பொம்மைகளுக்கு பதிலாக பெண்களை நிற்க வைத்த துணிக்கடை..!!
இந்நிலையில் ஆபத்தை உணராமல் இளசுகள் செய்யும் இந்த காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்போர் மீது FIR பதிவு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில் இளைஞர்கள் ரயில் தண்டவாளங்களில் உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ரயிவே வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.