மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து ஏரளாமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
.
பார்ப்போரை மிரளவைக்கும் வகையில் முரட்டு தனமான தாடி மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இப்படம் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஏற்கனவே விடுதலை 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க கைகோர்த்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.