குஜராத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமையால் முதலாமாண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த உள்ளது.
இந்திய திருநாட்டின் தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தார்புரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் முதலாமாண்டு படிக்கும் 18 வயது மாணவன் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கனவுகளுடன் மருத்துவ கல்லூரிக்கு படிக்க வந்த முதலாம் ஆண்டு மாணவர் அனில் மேதானியா உள்ளிட்ட ஜூனியர் மாணவர்கள், விடுதியில் வைத்து 3ம் ஆண்டு மாணவர்களால் பல மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
Also Read : இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் கலாநிதி ஹரிணி அமரசூரிய..!!
நெடு நேரம் நடந்த கொடுமையில் அனில் மேதானியா திடீரென சுருண்டு விழுந்துள்ளார் இதையடுத்து அவரை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கல்லூரியில் காலடி எடுத்துவைத்த மாணவன் ராகிங் கொடுமையால் உயிரிழந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.