தி.மு.கவும் காங்கிரஸும் மீனவர்களை இனிமேல் ஏமாற்ற நினைக்க வேண்டாம் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் (GK.Vasan) ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் தினமும் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
Also Read : https://itamiltv.com/temperature-rise-in-tamil-nadu-for-next-5-days-meteorological-center/
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :
கச்சத்தீவு பிரச்னையில் யாரும் யாரையும் மாறி மாறி குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு வரலாற்று பிழை என்றார். வரலாற்றிலே இந்த பிழை இடம்பெற்றிருப்பதாகவும் அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முடிவுக்கு தி.மு.க. உடந்தையாக செயல்பட்டதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
திமுக, காங்கிரசை மீனவர்கள் இனி ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என உறுதி தெரிவித்த அவர், (GK.Vasan) மீனவர்களை இனிமேல் ஏமாற்ற தி.மு.க., காங்கிரஸ் நினைக்க வேண்டாம். அவர்கள் ஏமாளிகள் அல்ல என கூறினார்.