ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று (அக்.29) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பாரபட்சமின்றி காட்டுத்தனமாக காட்டு காட்டென்று காட்டிய இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது.
Also Read : வரவேற்பை பெரும் ப்ளடி பெக்கர் படத்தின் புதிய ப்ரோமோ..!!
நகரங்களின் பல பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் . பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.