நாம் ஆசை ஆசையாய் வாங்கி உண்ணும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் (french fries) பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. “ஃப்ரென்ச் ஃப்ரைஸ்” பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக உருளைக்கிழங்கை வைத்து செய்யப்படும் உணவுகள் அனைவருக்கும் ஃபேவரட் தான்.. உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பஜ்ஜி என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அந்த வகையில், உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிடப்படும் பிரெஞ்ச் ப்ரைஸ் பலருக்கும் பிடித்த ஒன்று. இதற்காக, ஒரு பீச்சிருக்கோ அல்லது சினிமாவிற்கோ ஏன் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்தால் கூட பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடும் பழக்க பலருக்கு உண்டு.
ஆனால், எந்த ஒரு உணவுமே அதிகமாக உட்கொள்ளும் போது அது தீங்கு விளைவிக்கும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு பிரெஞ்சு ப்ரைஸ் மட்டும் விதிவிலக்கு அல்ல. பிரெஞ்ச் ப்ரைஸ் அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் கெடுதலாக அமைகிறது.
இதற்காக, சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுவது பதட்டத்தை 12 சதவீதம் அதிகரிப்பதாகவும், மனச்சோர்வை ஏழு சதவீதம் அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதட்டம் மனசோர்வு ஏற்பட பிரெஞ்சு ப்ரைஸில் காணப்படும் அக்ரிலமைட் என்னும் சேர்மம் தான் காரணமாக உள்ளது.
பொதுவாக, உருளைக்கிழங்கினை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் பொறிக்கும் பொழுது இந்த வகையான அக்ரிலமைட் சேர்மம் உருவாகிறது. அதிலும் குறிப்பாக, உருளைக்கிழங்கில் அதிகப்படியான மாவுச்சத்து இருப்பதன் காரணமாக அக்ரிலமைடு அதிகமாக உருவாகிறது.
இந்த அக்ரிலமைடு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, பதட்டம் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகப்படியான அக்ரிலமைடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இவை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகள் இது போன்று அதிக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு இருக்கும் பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றன.