சென்னை விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இருந்து சுமார் ₹1.11 கோடி வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து பாங்காங் செல்ல வந்த இரண்டு பயணிகள்;சந்தேகத்திற்கிடமாகா சுற்றி வந்துள்ளனர் . இதையடுத்து அவர்களை கண்காணித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களை வரவழைத்து சோதனை செய்துள்ளனர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது . இதையடுத்து அவர்களிடம் இருந்து 1.11 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாடு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இருக்கும் என தெரிந்தும் துணிச்சலாக குற்ற செயலில் ஈடுபட்ட அந்த இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்