சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சென்னையில் கடந்த இரு நாட்களாக ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த கார் பந்தயம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது .
அனல்பறக்க நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியின் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
ஃபார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன். தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் சிறந்த இடம் பிடிக்கும்.
Also Read : சென்னையில் 50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
இந்தியத் துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குகிற வகையில், சென்னைத் தீவுத்திடலில் நடைபெறும் Formula4Chennai Racing On the Street Circuit போட்டி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்தப் போட்டியை நேரில் காண விரும்பிய நம்முடைய ChepaukTriplicane-ஐ சேர்ந்த 100 மாணவ – மாணவியரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அதற்கான ஏற்பாட்டினைச் செய்து அழைத்துச் சென்றோம்.
இந்த கார் பந்தயம் சென்னைக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது . இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பல விளையாட்டுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.