அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் தற்போது அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக Fox News தொகுப்பாளர் பீட் ஹெக்செத்க்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக முன்னாள் ராணுவ வீரரும், Fox News ஊடகத்தின் தொகுப்பாளருமான பீட் ஹெக்செத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார் .
Also Read : டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு – கட்டுப்பாடுகளை விதித்தது மாநில அரசு..!!
‘ஹெக்சேத் ஒரு புத்திசாலி மற்றும் அமெரிக்காவின் உண்மையான விசுவாசி’ என இணையத்தில் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ள நிலையில் அமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லாத ஒருவரை நியமனம் செய்யதிருப்பதாக பென்டகனில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் செயல்திறன் துறையை (DOGE) தலைமை தாங்கி வழிநடத்த தொழிலதிபர் எலன் மஸ்க், இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூட்டாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.