திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
திருச்சி மாவட்டம், மணப்பாறை லெட்சம்பட்டி வட்டம். வையம்பட்டி திருச்சி – திண்டுக்கல் கிராமம் தேசிய பிரிவு சாலை அருகே, நெடுஞ்சாலையில் நேற்று (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியது .
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன், ஐயப்பன், மணிகண்டன், மணப்பாறை வட்டம், ஆலிப்பட்டியைச் சேர்ந்த நாகரத்தினம், மற்றும் தோகைமலை வட்டம், பில்லூரைச் சேர்ந்த தீனதயாளன், ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.