கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு ரூ.6000 மும் குமரி, தென்காசி மக்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்க தமிழ் நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்தது.
அது மட்டும் இன்றி கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன .
இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கிய பொது மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மீட்புப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பு வருகிறது.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு ரூ.6000 மும் குமரி, தென்காசி மக்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்க தமிழ் நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 000யினை ரூபாய் 10,000 ஆகவும் உயர்த்தி வழங்கிடவும் உதவிட்டுள்ளார்.