தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும் தங்கத்தின் தொடர் வெளியேற்றம் நகைப்பிரியர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 41 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 அதிகரித்து ரூ.41,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா உயர்ந்து, ரூ.74.50ஆக ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.74,500 ஆக அதிகரித்துள்ளது