சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 10ரூபாயும், சவரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நேரத்தில் நிலவிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்ந்தது.
அதிகரித்த விலைவாசியை தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதற்கிடையே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரணுக்கு ரூ.80 சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,670க்கும், சவரண் ரூ.37,360க்கும் விற்கப்பட்ட நிலையில் இன்று காலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ4,660 ஆகவும், சவரணுக்கு ரூ.80 சரிந்து ரூ.37,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 80 காசு குறைந்து, 61 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோவுக்கு ரூ.800 சரிந்து, ரூ.61,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.