சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் கரன்சியின் ஏற்றத்தாழ்வு காரணமாக தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. விலை அதிகரித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மக்களிடத்தில் அதிரித்தே காணபடுகிறது.
பொதுவாக திருமணம் போன்ற சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகள் காலங்களில் தங்க நகைகளை வாங்குவது மக்களின் வழக்கமாக இருந்தது. இப்போது இந்த வழக்கம் பெருமளவு மாறி இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் காய்கறி, மளிகை பொருட்கள் தொடங்கி எந்த பொருட்களை எடுத்தாலும் அதன் விலை வாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படியான சூழலில் தங்கத்தின் விலை குறித்து சொல்லவேண்டியதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.22 உயர்ந்து, ரூ.5,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.