சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலையில் தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் படி தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும் விலை ஏற்றம் என்பது அதிகரித்தே காணப்படுகிறது.
அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.47,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,945ஆக விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,415ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.51,320-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வில்லியின் விலை 30 காசுகள் உயர்ந்து, ரூ.81.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.