சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில் இச்சம்பவத்தில் கைதான விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கைதியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
கத்தி குத்தில் பலத்தகாயமடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய விக்னேஷ் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
127(2),132, 307, 506(ii) BNS r/w 3 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.