தனுஷ் பாடியுள்ள “நாந்தாண்டா நீதி” என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியாகியது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
https://x.com/gvprakash/status/1724385387282579757?s=20
இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி நாந்தாண்டா நீதி என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.