பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடார்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது .
Also Read : ரயில் பயணிகளின் கவனத்திற்கு – மழை பாதிப்பு காரணமாக இன்று சில முக்கிய ரயில்கள் ரத்து..!!
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் ஹெச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .
அவரது சமூக வலைதளத்தில் இருந்து அந்த இரு பதிவுகளும் வெளியானதாக காவல்துறை ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், ஹெச். ராஜாவுக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.