ஹன்சிகா ( hansika motwani ) தற்போது தனது கணவருடன் ஈபில் டவர் முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. இதன்பிறகு மாப்பிள்ளை,வேலாயுதம், சிங்கம் 2 , பிரியாணி , அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
தற்போது தமிழில் நான்கு படங்கள் தெலுங்கில் இரண்டு படங்கள் என தன் கைவசம் 6 படங்கள் வைத்துள்ள ஹன்சிகாவிற்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020ஆம் ஆண்டு சோகேல்
என்பவர் உடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்.
இந்த தொழில் லாபகரமாக நடக்கிறது என்ற தகவல்களும் வெளியானது. இந்நிலையில் சோகேல் என்பவரையே ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஹன்சிகாவிற்கும் ஷோகேலுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஹன்சிகாவிற்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்காக ஜெய்ப்பூர் அரண்மனை தயாராகி வருவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் ஹன்சிகா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
தற்போது தனது வருங்கால கணவருடன் ஹன்சிகா போட்டோ சூட் ஒன்றை ஈபில் டவர் முன் நடத்தி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.