நடப்பு ஐபிஎல் தொடருக்காக குஜராத் அணியிடம் பலகோடி கொடுத்து மும்பை அணியினால் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியுடனான நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளது தற்போது செம வைரலாக வலம் வருகிறது.
2024 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் , தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .
இந்நிலையில் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் குஜராத் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து போராடி வாங்கியுள்ளது .
இந்நிலையில் 2 வருடம் கழித்து தனது தாய் வீடான மும்பை அணிக்கு மீண்டும் வந்துள்ளது குறித்து குஜராத் அணி உடனான பந்தம் குறித்து ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாக வலம் வருகிறது.
குஜராத் அணியுடனான நினைவுகள் எப்போதும் என் இதயத்தில் இருக்கும். மறக்க முடியாத பயணத்திற்கு நன்றி. குஜராத் அணியின் ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றி. ஒரு கேப்டனாக அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த சிறந்த மரியாதை. எனக்கும், என் குடும்பத்திற்கு நீங்கள் அளித்த அன்பிற்கு மிக்க நன்றி மீண்டும் எனது வீட்டிற்கு செல்கிறேன் அனைவர்க்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இதேபோல் தன்னுடைய ‘ஒரிஜினல்’ அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்ப வேண்டும் என ஹர்திக் எங்களிடம் விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம்! என குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.