Headlines : வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா முதல்வர் – ஈபிஎஸ்
Headlines : முதல்வர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணம் மூலம் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?
2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு என்ற இலக்குக்கான வரைவு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என ஈபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
17 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
2 விசைப்படகுகளுடன், தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்ததுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
6வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது; தற்போது அதே நிலையே தொடர்கிறது.
திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது மற்றும் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
https://x.com/ITamilTVNews/status/1755455641509077032?s=20
கருப்பு சட்டை அணிந்து திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள முதலமைச்சர், அமைச்சர்கள் டெல்லியில் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : vegetable price -உச்சத்தில் முருங்கைக்காய் – கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை
நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது – மல்லிகார்ஜுன கார்கே.
தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேச பாஜக அரசு முன்வரவில்லை.
பல இடங்களில் காங். கட்சியை கவிழ்த்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
பாஜக அல்லாத மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.