Headlines : தனித் தீர்மானங்கள் கொண்டு வரும் முதலமைச்சர்.
Headlines : மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது எனவும்,
ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் 2 தனித் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வருகிறார்.
சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ் இருக்கை மாற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்படுள்ளது. 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் ஆ.பி.உதயகுமாருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
இருக்கை விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சாம்பல் புதன் தினம்
சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று முதல் தொடங்குவதால் மக்கள் ஆலயங்களில் பிரார்த்தனை செய்தனர்.
விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி 2வது நாளாக கண்ணீர் புகை குண்டு வீச்சப்படுகிறது.
உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை பயன்படுத்தி 2வது நாளாக கண்ணீர் புகை குண்டு வீச்சப்படுகிறது.
ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை போலீஸார் தாக்குவதாக பஞ்சாப் விவசாயி ராஜ்விந்தர் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியானாவில் தொலைதொடர்பு சேவைகள் நிறுத்தம்
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களின் தொலைதொடர்பு சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : bail petition – செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! இன்று விசாரணை!
தொலைபேசி சேவைகள் தவிர, மொபைல் இணைய சேவைகள், SMS மற்றும் அனைத்து தொலைதொடர்பு சேவைகளும் பிப்ரவரி 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார்.
https://x.com/ITamilTVNews/status/1757631741659943160?s=20
தற்போது ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார்
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இம்ரான் கானின் பிடிஐ கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
பெரும்பான்மைக்காக நவாஸ் ஷெரீப் கட்சியும் (பிஎல்எம் என்), பிலாவல் பூட்டோ கட்சியும் (பிஎல்எம்) கூட்டணி அமைத்துள்ளன.