Headlines : செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை
Headlines செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக இன்று விசாரணை நடைபெறுகிறது.
CBSE பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது உள்ளது.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு, மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13ம் தேதியும் நிறைவடைய உள்ளது.
என்.ஐ.ஏ. சோதனை – ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரயில் எஞ்சின் தடம் புரண்டது.
சென்னை செண்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டது.
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று சரிசெய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.
வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை
வயநாட்டில் யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை காட்டு யானை விரட்டியது. இதனால் சத்தத்தை எழுப்ப துப்பாக்கியால் சுட்டபடியே, வனத்துறையினரை ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கிருந்த ஒருவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்!
3வது டெஸ்ட் கிரிக்கெட் – இந்தியா பேட்டிங்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சர்பராஸ் கான் & துருவ் ஜூரல் விளையாடுகின்றனர். ஜடேஜாவும், சிராஜும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க : cbse board exam : இன்று முதல் தொடக்கம்!
டக் அவுட்டானார் சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 2 விக்கெட்களை இந்திய அணி இழந்துள்ளது