அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் Bail மனு குறித்து நீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது .
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
சிறையில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதால் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டது .
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்தபடியே காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் .
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
ஜனவரி 31 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .
இதற்கிடையே ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை பெற்று தற்போது சிறையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
என்னதான் செந்தில் பாலாஜிக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை கொடுத்து வந்தாலும் அவருக்கு அடிக்கடி உடல் நலம் தொடர்ந்து பாதித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் 17 ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : https://itamiltv.com/the-number-of-organ-donations-is-high-in-tamil-nadu/
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக மனு அளித்துள்ளார் .
இந்த ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்க உள்ளார்.
தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாக கூறி Bail மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.