உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரா கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த மாநிலங்களிலும் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்தனர். அதே போல் வெள்ளப் பெருக்கு காரணமாக பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், இமாச்சலில் பருவமழையின் தீவிரம் சற்றே குறைந்துள்ளது. இருப்பினும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. சம்பா, மாண்டி மாவட்டங்களில் ஆகஸ்ட் 26 வரை மழை, வெள்ளத்துக்கு வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் நைனிடால், சம்பாவாட், டேராடூன், பாரி, பாகேஸ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்கள் தவிர ஏனையே மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.