கோத்தகிரி (Kothagiri) மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி (Kothagiri) பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகாலை முதல் மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர்.
மேலும், கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும் கடும் மேகமூட்டம் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இந்நிலையில், கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால், கடும் குளிரும் நிலவுகிறது. இதனால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.