தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தென் மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலர் முகாம்களில் தங்கவைக்கப்படும் பலர் வீட்டுக்குளேயே முடங்கி உள்ளதால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பேரிடர் குறித்து தற்போதைய நிலவரம் வெளியாகி உள்ளது :
- தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களில், மீட்பு பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளது. உணவு, குடிநீர் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது .
- கடும் வெள்ளத்தால் பல கிராமங்கள் 3 நாட்களாக தொடர்பற்று இருந்த நிலையில், ராணுவம் அங்கு சென்று மீட்பு பணிகளை தொடங்கியது
- தூத்துகுடி அரசு மருத்துவமனை, நீதிமன்றம், காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் தண்ணீர் முற்றிலும் வடியவில்லை
- நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து சீரானது
- நெல்லை – திருச்செந்தூர் இடையே இன்று பேருந்து சேவை இயக்கப்படவில்லை. நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கம்
- தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மீட்பு, நிவாரணப் பணி நடக்கிறது
- மத்திய அரசின் குழு தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை இன்று பார்வையிடுகிறது
- பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால், தாமிரபரணியில் நீர் வரத்து குறைந்துள்ளது.