இன்று முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு தமிழகதில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை ( heavy rain alert ) பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமான தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Also Read : மதுராந்தகம் சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாட்கள் கோடை வெயில் மக்களை வச்சு செய்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மலை மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்தாலும் மீண்டும் கனமழை பெய்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களில் தேவையான ( heavy rain alert ) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவன் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.