பிரதமரின் திருச்சி (Trichy) வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷே விழா
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு வருகிறார். மேலும், மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை காலை சென்னை வரும் பிரதமர் அங்கு நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பின்னர் ராஜ் பவனில் ஓய்வெடுக்கும் பிரமர் மோடி இதனைத் தொடர்ந்து அவர் மறுநாள் காலை 20ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.
https://x.com/ITamilTVNews/status/1747939084486787164?s=20
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிபேட் உள்ள இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
மேலும் படிக்க : https://itamiltv.com/dhanush-51-movie-shooting-started-in-hyderabad/
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெலிபேட் அமைக்கும் பணி
இந்த நிலையில் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிகாப்டர் இறங்குதளம் எனப்படும் ஹெலிபேட் அமைக்கும் பணி யாத்திரி நிவாஸ் எதிரே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பணியை திருச்சி (Trichy) மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.