தாய்லாந்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி (High Quality) வரப்பட்ட உயர் ரக கஞ்சா சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் 77 கோடி மதிப்புள்ள 14 கிலோ ‘ஹைட்ரோ போனிக்’ வகை கஞ்சாவை அலேக்காக கொண்டு வந்துள்ளார் .
இதனை அறிந்த விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் அந்த நபரை பிடிக்க விமான நிலையத்தில் காத்திருந்துள்ளனர் .
ஒருகட்டத்தில் பிடிபடுவோம் என்பதை அறிந்துகொண்ட அந்த நபர் கஞ்சா இருந்த சூட்கேஸை எடுத்துச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நைசாக தப்பி சென்றுள்ளார் .
கஞ்சா இருக்கும் சூட்கேஸ் சாக்பீஸால் குறியீட்டு தாய்லாந்து சுங்கத்துறையினர் இந்திய சுங்கத்துறையினருக்கு முன்னதாகவே தகவல் அளித்திருந்தனர்.
இதனால் அந்த உயர் ரக கஞ்சாவையும் அதனை கடத்தி வந்த நபரையும் பிடிக்க விமனநிலைத்தில் அதிகாரிகள் முன்கூட்டியே ரெடியாக இருந்துள்ளனர் இருப்பினும் அந்த நபரை பிடிக்க முடியவில்லை.
இவ்வகை கஞ்சா தரையில் அல்லாமல் தண்ணீரிலேயே முழுவதுமாக மிதந்து வளரும் என கூறப்படுகிறது
இந்நிலையில் தப்பி ஓடிய புதுச்சேரியை சேர்ந்த (High Quality) அந்த கடத்தல் நபரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 11.02.2024 ஆம் தேதி வெளிமாநிலத்திலிருந்து ரேடியல் ரோடு வழியாக கார்களில் பல கிலோ கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது . அப்போது வெளிமாநில பதிவெண்கள் கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 300 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
Also Read : https://itamiltv.com/dont-believe-rumours-tvk-gave-an-expalanation/
அதனை தொடர்ந்து வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரணை செய்ததில் கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துச்சென்றது தெரியவந்தது.
மாநிலம் விட்டு மாநிலம் வந்த 300 கிலோ கஞ்சா கடத்தி விற்க முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.