2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை (banks holidays) அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வங்கி பணி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு சிரமம் இன்றி வங்கி சேவைகளை பெற வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அந்த வகையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை (banks holidays) நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன.
அதன்,படி, ஜனவரி மாதத்திற்கான விடுமுறை நாட்கள்…..
ஜனவரி 1- புத்தாண்டு
ஜனவரி 2 – மிசோரம் மாநிலத்தில் விடுமுறை
ஜனவரி 3 – மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 4 – மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 8 – ஞாயிறு
ஜனவரி 12 – மேற்கு வங்கத்தில் விடுமுறை
ஜனவரி 14 – இரண்டாவது சனி
ஜனவரி 15 – ஞாயிறு
ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 – உழவர் திருநாள்
ஜனவரி 22 – ஞாயிறு
ஜனவரி 23; மேற்கு வங்கத்தில் விடுமுறை
ஜனவரி 26 – குடியரசு தினம்
ஜனவரி 28; நான்காவது சனிக் கிழமை
ஜனவரி 29 – ஞாயிறு
முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல இயங்கும். மேற்கண்ட நாள்களில் வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.