நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளைக்கும்பல் பிடிபட்ட சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா விளக்கமளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சில ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு கண்டைனர் லாரி மூலம் தமிழகத்திற்குள் கொள்ளையர்கள் வந்துவிட்டனர்.
இதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் சென்ற கண்டைனர் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்றுள்ளது . இதையடுத்து சினிமா பாணியில் கொள்ளையர்களை துரத்திய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.
இதையடுத்து கொள்ளையர்கள் பிடிபட்ட இடத்தில ஆய்வு நடத்திய சேலம் சரக டிஐஜி உமா இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
Also Read : Joint Venture-ல் இணையும் மஹிந்திரா-ஸ்கோடா வ்வ்..!!
கொள்ளையர்கள் 7 பேரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிப்பதே இவர்கள் வேலை.
கொள்ளையடிக்க Creta கார் பயன்படுத்தப்பட்டது. திருச்சூரிக்கு காரில் சென்றுதான் கொள்ளையடித்துள்ளனர்.
இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு கும்பல் காரிலும், ஒரு கும்பல் லாரியிலும் வந்துள்ளனர்.
ஒரு கும்பல் டெல்லியில் இருந்து கண்டெய்னர் லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளனர்.
கூகுள் மேப்பில் எங்கெல்லாம் ஏடிஎம்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்து கொள்ளையடித்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் இயந்திரம் மூலம் அறுத்து கொள்ளையடித்துள்ளனர் என சேலம் சரக டிஐஜி உமா விளக்கமளித்துள்ளார்.