Combined Higher Secondary Level (CHSL) 2023 : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? காலிப்பணியிடங்கள் (vacancy), தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பின்படி தோராயமாக 1600 காலிப்பணியிடங்கள் (vacancy) இருப்பதாகவும், லோவர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த தேர்வானது கணினிவழி தேர்வு, விரிவான தேர்வு மற்றும் திறனறி தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருக்க வேண்டும் எனவும், விண்ணப்ப கட்டணமாக 100 ருபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை..
1 : SSC இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
2 : உங்களது SSC பதிவு எண் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
3 : APPLY என்ற பகுதியில் கிளிக் செய்து CHSL அறிவிப்பு பகுதிக்குள் செல்ல வேண்டும்.
4 : Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 என்ற அறிவிப்பில் கிளிக் செய்ய வேண்டும்.
5 : ஆன்லைன் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.
6 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
இந்த தேர்விற்கு (9.5.2023) தேதி துவங்கி (8.6.2023) வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 10.6.2023