காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் சீருடையில் இருந்த பெண் காவலர் மீது அவரது கணவர் அரிவாளால் ( Husband arrested ) கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற நிலையில் கணவர் மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரியகாஞ்சிபுரம் சாலையில் கடந்த 17 ஆம் தேதி சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லிராணி தனது பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த டில்லிராணியின் கணவர் டில்லிராணியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார் .
கண்மூடித்தனமான இந்த அரிவாள் வெட்டில் காவலர் டில்லிராணியின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வெளியேறியது .
இதையடுத்து அவரை மீட்ட அக்கபக்கத்தினர் அபூலன்சுக்கு அழைப்பு விடுத்தது அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . தற்போது மருத்துவமனையில் டில்லிராணி சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக டில்லிராணி மற்றும் மேகநாதன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மேகநாதனின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் மேகநாதனை தேடி வந்த நிலையில் ( Husband arrested ) தலைமறைவாக இருந்த மேகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.