உதயநிதிக்கு 46 வயதுதான் ஆகிறது. நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அனுபவத்தால், உழைப்பால் எனக்கு பதவி கிடைத்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல. அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
விஜய் ஒரு முன்னணி நடிகர், அவரிடம் ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவை செய்ய வேண்டுமென கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Also Read : மாமியாரால் வந்த கொடூர முடிவு – திருமணமான 6 மாதங்களில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் ..!!
முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டைதான். தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. திமுகவுக்கு தனித்த பலம் இல்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது.
உதயநிதிக்கு 46 வயதுதான் ஆகிறது. நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அனுபவத்தால், உழைப்பால் எனக்கு பதவி கிடைத்தது என தெரிவித்துள்ளார்.