Modi Speech : என் 16-வது வயதில் தேசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன் நீங்கள் தான் என் குடும்பம், இந்திய நாட்டில் உள்ள மக்கள் தான் என் குடும்பம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் பயணமான தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை, நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
சென்னை நகரம் முழுவதும் வெளிச்சத்தால் சூழ்ந்துள்ளது . ஒவ்வொருமுறையும் நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் எனக்குள் சக்தி உண்டாகிறது .
திறமைகள், வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் நகரம் சென்னை வளர்ச்சியான இந்தியாவை உருவாக்குவதில் சென்னை மக்களின் பங்கு மிக முக்கியமானது
இந்தியாவின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறேன் . எரிசக்தி துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது;
எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து கொண்டு இருக்கிறது. கல்பாக்கம் ஈனுலையில் இருந்து விரைவில் மின் விநியோகம் தொடங்கும்.
ரூ.75,000 கோடி செலவில் சூரிய எரிசக்தி திட்டம் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம்.
சில நாட்கள் முன்பு இந்தியாவின் (Modi Speech) முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம்.
என் 16-வது வயதில் தேசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன் . நீங்கள் தான் என் குடும்பம், இந்திய நாட்டில் உள்ள மக்கள் தான் என் குடும்பம் . இந்தியாவின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.