மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்த வாழை படத்தின் வெற்றி விழாவில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை நிகிலா விமல் உருக்கமாக பேசியிருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் .
படிப்பறிவு , நாகரிக வளர்ச்சி , சமூக நீதி உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான விஷயங்களை இன்றைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வாய் கொண்டு சேர்க்கும் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வாழை .
கிராமத்து மனம் மாறாத இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பியது .
Also Read : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை – செங்கல்பட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிகிலா விமல் இப்படம் மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து பேசியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மாரி அவர்களின் வாழ்க்கையை தழுவிய படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். எல்லோரும் ‘பூங்கொடி டீச்சர்’ என என்னை அழைப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக உணர்கிறேன்.
‘அழகிய லைலா’வை விட பூங்கொடி டீச்சர் என அழைப்பதுதான் பிடித்திருக்கிறது. ஒரு கதாபாத்திரமாக மக்கள் மனதில் நிற்பது மகிழ்ச்சி. இந்த சிறுவர்களின் வெற்றியை பார்க்க நான் ஆவலாக இருந்தேன். படக்குழுவுக்கு என்னுடைய நன்றிகள் என நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.