சென்னையில் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டருந்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கூறியவாறு மகாவிஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ள மகாவிஷ்ணு கூறிருப்பதாவது :
நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு எந்த தவறான கருத்தையும் நான் கூறவில்லை. தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனது ஆஸ்திரேலிய பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.
என்னை மீது வந்துள்ள புகாருக்கு விளக்கம் தருவதற்காகவே நான் சென்னை வருகிறேன். இன்று மதியம் 1.10 மணிக்கு சென்னைக்கு வர உள்ளேன்.
சென்னை வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்
இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டு உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க உள்ளேன்; தற்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே நான் விரும்புகிறேன்.
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர உள்ளேன் என மகாவிஷ்ணு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.