டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி, நமது தேசத்தை ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என ஜோ பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன், தனது பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
81 வயதான பைடனுக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வருவதன் காரணமாகவும் அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தி வந்தனர். இதன்காரணமாக பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
இதையடுத்து துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் தற்போது பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில் :
அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன். டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி, நமது தேசத்தை ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அசாதாரணமான தலைமை பண்பிற்கும், நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.