ஹிமாச்சலில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் (IAS & IPS) உடல் கண்ணம்மா பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சைதை துரைசாமி.
இவரது மகன் வெற்றி. திருப்பூரை சேர்ந்த தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றுள்ளார்.
கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
இதில், காரை ஓட்டிய தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்
இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது . விபத்து நடந்த இடத்திலிருந்து 6 கி மீ தொலைவில் உள்ள சட்லஜ் ஆற்றில் உடல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலை பொது மக்களின் அசலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சசிகலா சீமான் எடப்பாடி பழனிச்சாமி அன்புமணி ராமதாஸ் நடிகர் அஜித் விஜய் விஜயபிரபாகரன் என ஏராளமான நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.
சைதை துரைசாமி மற்றும் வெற்றி துரைசாமி இருவரும் ஒரு அறக்கட்டளை நடத்தி வந்த நிலையில் அந்த அறக்கட்டளையில் ஏரளாமானோர் பயன்பெற்றுள்ளனர்.
இந்த அறக்கட்டளையின் மூலம் ஏராளமானோர் இன்று இந்தியா முழுவதும் IAS & IPS என பல உயர் பதவிகளில் உள்ளனர்.
வெற்றி துரைசாமியின் மறைவு செய்தியை அறிந்த இவர்கள் அனைவரும் தங்களது வேலைகளை விட்டு விட்டு வெற்றியின் இறுதி பயணத்திற்கு (IAS & IPS) அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர்.
Also Read : https://itamiltv.com/m-s-baskar-new-movie-name-at-captain-memorial/
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் குடுமபத்தினரின் கண்ணீர் அஞ்சலியுடன் வெற்றி துரைசாமியின் உடல் சென்னை தி நகரில் உள்ள கண்ணம்மா பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .