பின்னணி பாடகி பவதாரிணி (Ilaiyaraaja daughter) மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி (வயது 47) . பின்னணி பாடகியான பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பதவாரிணி நேற்று காலமானார்.
பவதாரிணியின் மறைவுக்கு திரை உலகத்தினரும் அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் – நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
மக்களவை எம்.பி. கனிமொழி
இசைக் கலைஞர் பவதாரிணி (Ilaiyaraaja daughter) மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை
சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் புதல்வியுமான பவதாரிணி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இதையும் படிங்க : Bhavatharini மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரிணி.
இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரிணி இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்தபோது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.
https://x.com/ITamilTVNews/status/1750749134481682740?s=20
பவதாரிணியை பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அன்புமணி ராமாதாஸ், ஒ. பன்னீர்செல்வம், எல்.முருகன், சீமான் , நடிகர் சரத்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.