வேலூரில் ஓடும் ரயில் தள்ளிவிடப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கர்ப்பிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன் ரயிலில் பயணித்த 4 மாத கர்ப்பணியிடம் இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் . இதையடுத்து அந்த இளைஞரிடம் இருந்து தப்ப முயன்றபோது அந்த பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளான் அந்த கொடூரன் இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது.
Also Read : இளம் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த பாஜக இளைஞர் அணி செயலாளர்..!!
மேலும் பலத்த காயத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த கர்ப்பிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வயிற்றில் உள்ள இறந்து சிசுவை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
என்றும் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.