தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று அதிகாலை ( tn toll gates price hike ) முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இதில் 339 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது .
இதையடுத்து நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
Also Read : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று..!!
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜூன் 1) மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இன்று திங்கள்கிழமை (ஜூன் 3) அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது .
தமிழகத்தில் மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகாலை 12 மணி முதல் அமலுக்கு வந்தது.
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ₹5 முதல் ₹20 வரையிலும், ( tn toll gates price hike ) மாதாந்திர பாஸ் கட்டணம் ₹100 முதல் ₹400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.