முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நாளை யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கும் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் . திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் நீராடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
Also Read : வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை தவறானது – டிரம்ப் ஆவேசம்
தைப்பூசம் , கந்த சஷ்டி போன்ற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் நவம்பர் 2ம் தேதி நாளை கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது . இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக 1.11 லட்சம் சதுர அடியில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் . கோவிலைச் சுற்றி ஆங்காங்கே குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.