வெம்பக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான கற்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தங்களது அகழாய்வு பணிகளை துரிதமாக நடத்தி வருகிறது . அந்தவகையில் வெம்பக்கோட்டை , கீழடி உள்ளிட்ட பகுதியில் தற்போது அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான காளையின் உடல் பகுதி, சுடுமண் காதணி, சுடுமண் மணி, சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Also Read : நாடாளுமன்றத்தில் ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்..!!
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இப் பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம். முழுமையான ஆய்விற்கு பிறகு எக்காலத்தினை சார்ந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும் என தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.