சென்னையில் கனமழை விடாமல் பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பொதுப்போக்குவரது வேண்டி கோரிக்கை வைத்த நிலையில் தற்போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read : சென்னை சென்ட்ரலில் புறப்படும் 5 ரயில்கள், இன்று ஆவடியில் இருந்து புறப்படும்..!!
கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
நாளையும் இதே போல் மாநகரப் பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.