அமெரிக்காவில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மற்றும் அவரது தாயாரை வீட்டின் உரிமையாளர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தான்
அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கு பகுதியில் 32 வயது இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் தனது 6 வயது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர், வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணையும், அவரது 6 வயது மகனையும் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார்.
26 முறை கத்தியால் குத்தப்பட்ட 6 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை தொடர்பாக இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டின் உரிமையாரான 71 வயதான ஜோசப் ஸூபா என்பவர் மீது கொலை மற்றும் வெறுப்பு குற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய அதிகாரிகள், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் அவசர அழைப்பு எண்ணுக்கு குறித்த பெண் அழைத்து, வீட்டு உரிமையாளுருடன் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து அவர் தன்னையும் தனது 6 வயது மகனையும் கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தாயார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம் என்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்று கூறினர்.
இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே பலமுறை போர் வெடித்துள்ளது. இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான இந்த போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது